< Back
மாநில செய்திகள்
மினி லாரி தீப்பிடித்தது
சிவகங்கை
மாநில செய்திகள்

மினி லாரி தீப்பிடித்தது

தினத்தந்தி
|
16 March 2023 12:15 AM IST

மின்வயரில் உரசியதால் மினி லாரி தீப்பிடித்தது

சிவகங்கை,

சிவகங்கை டி.புதூர் பகுதியில் தேங்காய் நார் ஏற்றி கொண்டு மினி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக மின்சார வயர் மினி லாரியில் இருந்த தேங்காய் நாரின் மீது உரசியதால் அந்த நாரில் திடீரென தீப்பிடித்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த சிவகங்கை தீயணைப்பு படை அலுவலர் கிருஷ்ணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைத்தனர். இதில் மினி லாரியின் பின் பகுதி தீயில் கருகி சேதம் அடைந்தது.

மேலும் செய்திகள்