< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்
உருவபொம்மை எரிப்பு
|29 Jun 2022 9:56 PM IST
எடப்பாடி பழனிசாமியின் உருவபொம்மையை எரித்து அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சாயல்குடி,
கடலாடியில் அ.தி.மு.க. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து அவரது உருவபொம்மை எரிக்கப்பட்டது. மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் சத்தியமூர்த்தி தலைமையில் ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் நீதி தேவன், இணைச் செயலாளர் முத்து முருகன், ஒன்றிய இளைஞரணி துணைச்செயலாளர் முனியாண்டி, ஒருவானேந்தல் ஊராட்சி தலைவர் சீதா நாகராஜன் ஆகியோர் முன்னிலையில் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து கோஷமிடப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜு, சிவி சண்முகம், கே.பி. முனுசாமி, ஜெயக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உருவ பொம்மையை எரித்தனர். கிளை செயலாளர்கள் அருணாச்சலம், மாயகிருஷ்ணன், முருகன், விசுவநாதன், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.