< Back
தமிழக செய்திகள்
நல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில்தீயணைப்பு துறையினர் ஒத்திகை பயிற்சி
நாமக்கல்
தமிழக செய்திகள்

நல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில்தீயணைப்பு துறையினர் ஒத்திகை பயிற்சி

தினத்தந்தி
|
14 July 2023 12:30 AM IST

கந்தம்பாளையம்:

நாமக்கல் மாவட்டம் நல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் தீயணைப்பு துறை சார்பில் தீயணைப்பு ஒத்திகை பயிற்சி நடந்தது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். தீ விபத்து ஏற்பட்டால் அதில் இருந்து நம்மை எவ்வாறு காத்துக் கொள்வது, விபத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது, தீ மேலும் பரவாமல் எவ்வாறு தடுப்பது, தீயணைப்பான் கருவியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கம் அளித்தனர்.

இதில் வட்டார மருத்துவர் அலுவலர் கவிதா, சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மேகலா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மணிவண்ணன், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் உள்பட பலர் கலநது கொண்டனர்.

மேலும் செய்திகள்