< Back
மாநில செய்திகள்
விருதுநகர் கல்குவாரி வெடிவிபத்து: 2 பேர் மீது வழக்குப்பதிவு
மாநில செய்திகள்

விருதுநகர் கல்குவாரி வெடிவிபத்து: 2 பேர் மீது வழக்குப்பதிவு

தினத்தந்தி
|
1 May 2024 2:57 PM IST

விருதுநகர் கல்குவாரி வெடிவிபத்து தொடர்பாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் காரியப்பட்டி அருகே ஆவியூர் - கீழஉப்பிலிக் குண்டு ஆலையில் தனியார் கல்குவாரி இயங்கி வருகிறது.

இந்த கல்குவாரிக்கு பாறைகளை உடைக்க பயன்படுத்தப்படும் வெடிமருந்துகள் கொண்டுவரப்பட்டுள்ளன. குவாரியில் உள்ள அறையில் வெடிமருந்துகளை இன்று காலை இறக்கி வைத்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக வெடிமருந்துகள் வெடித்து சிதறின.

இந்த கோர விபத்தில் 4 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல்சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்து தொடர்பாக ஆவியூர் காவல் நிலையத்தில் குவாரி பங்குதாரர் சேது ராமன் என்பவர் சரணடைந்துள்ளார்.

இந்நிலையில், குவாரி உரிமையாளர்கள் ராஜ்குமார் மற்றும் சேது ராமன் ஆகிய இருவர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்