< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்
தொழிலாளியின் கைவிரல்கள் துண்டிப்பு
|9 July 2022 10:40 PM IST
தொழிலாளியின் கைவிரல்கள் துண்டானது
ராமநாதபுரம் சக்கரக்கோட்டை எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 40). நகராட்சி துப்புரவு பணியாளரான இவர் அல்லிக்கண்மாய் பகுதியில் மக்கும் குப்பை மக்காத குப்பையை பிரித்து எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக குப்பைகளை அரைக்கும் எந்திரத்தில் சிக்கி அவரின் 4 விரல்கள் துண்டானது. இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.