< Back
மாநில செய்திகள்
மதுரையில் விதிகளை மீறி நம்பர் பிளேட் பொருத்திய வாகனங்களுக்கு அபராதம் - மாநகர போலீசார் நடவடிக்கை
மாநில செய்திகள்

மதுரையில் விதிகளை மீறி நம்பர் பிளேட் பொருத்திய வாகனங்களுக்கு அபராதம் - மாநகர போலீசார் நடவடிக்கை

தினத்தந்தி
|
3 Dec 2022 5:42 PM IST

மதுரை மாநகரில் விதிமுறைகளை மீறி நம்பர் பிளேட் பொருத்திய வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.

மதுரை,

வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் வாகன எண்ணைத் திவிர பிற எழுத்துக்களோ, படங்களோ, சின்னங்களோ இடம்பெறக் கூடாது எனவும், அவ்வாறு விதிகளை மீறி நம்பர் பிளேட் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கவும் மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் மதுரை மாநகரில் இன்று தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்ட போக்குவரத்து போலீசார், விதிமுறைகளை மீறி நம்பர் பிளேட் பொருத்திய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தனர். விதிமுறைகளுக்கு உட்பட்டு வாகன நம்பர் பிளேட்டுகளை மாற்ற வேண்டும் எனவும் அவர்களுக்கு போலீசார் அறிவுறுத்தினர்.

மேலும் செய்திகள்