சென்னையில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் - ஒரே நாளில் ரூ.1.16 லட்சம் வசூல்
|சென்னையில் நேற்று முக கவசம் அணியாத 233 பேரிடம் ஒரு லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
சென்னை,
கொரோனா தொற்று பரவல் இந்தியாவில் பல மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் குறிப்பாக நகர்ப்புறங்களில் தொற்றுப்பரவல் அதிகரித்து உள்ளது. இதனால் கொரோனா கட்டுப்பாடுகளை தொடர்ந்து கடைப்பிடிக்குமாறு மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன.
அந்த வகையில் சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும், முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதன்படி நேற்று முன்தினம் முக கவசம் அணியாத 121 பேரிடம் 60 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நேற்று 233 பேரிடம் ஒரு லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. மொத்தமாக 2 நாட்களில் ஒரு லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.