< Back
மாநில செய்திகள்
நாமக்கல்லில்216 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்கடைக்காரர்களுக்கு ரூ.40 ஆயிரம் அபராதம்
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல்லில்216 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்கடைக்காரர்களுக்கு ரூ.40 ஆயிரம் அபராதம்

தினத்தந்தி
|
19 April 2023 7:00 PM GMT

நாமக்கல் நகராட்சி ஆணையாளர் சுதா உத்தரவின்படி நாமக்கல் நகராட்சி கடைவீதி, குட்டை தெரு, திருமலைசாமி தெரு பகுதிகளில் உள்ள மொத்த வியாபார கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு மற்றும் விற்பனை குறித்து நகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

20 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 216 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் மொத்த வியாபாரிகளுக்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த ஆய்வில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய நாமக்கல் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சுமித்ரா பாய், நகராட்சி சுகாதார அலுவலர் திருமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர் பாஸ்கர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் முரளி, உதவி பொறியாளர் கார்த்திக் குமுதன் மற்றும் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்