< Back
மாநில செய்திகள்
ராசிபுரத்தில்  பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைக்காரர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
நாமக்கல்
மாநில செய்திகள்

ராசிபுரத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைக்காரர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

தினத்தந்தி
|
5 Nov 2022 12:15 AM IST

ராசிபுரத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைக்காரர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

ராசிபுரம்:

ராசிபுரம் நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் உத்தரவின் பேரில் நகராட்சி தூய்மை அலுவலர் செல்வராஜ் தலைமையில் பணியாளர்கள் நகரில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய கடைக்காரர்களிடம் இருந்து 82 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி அலுவலர்கள் கைப்பற்றினர். மேலும் கடைக்காரர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதில் நகராட்சி தூய்மை அலுவலர்கள், தூய்மை மேற்பார்வையாளர் மற்றும் பரப்புரையாளர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்