< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
விஜயகரிசல்குளம் அகழாய்வில் எலும்புகள் கண்டெடுப்பு
|18 July 2023 1:13 AM IST
விஜயகரிசல்குளம் அகழாய்வில் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டது.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை தாலுகா விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் 2-ம் கட்ட அகழாய்வில் இதுவரை தங்க அணிகலன், சுடு மண்ணால் ஆன பொம்மை, சுடுமண் அகல்விளக்கு, கருப்பு நிற சுடுமண் தோசைகல் உள்பட பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளன. இ்ந்தநிைலயில் நேற்று தாடையுடன் கூடிய பற்கள் மற்றும் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு விலங்கின் எலும்புகளா அல்லது மனிதனுடைய எலும்புகளா என பரிசோதனை செய்த பின்னரே தெரியும் என தொல்லியல்துறையினர் தெரிவித்தனர்.