< Back
மாநில செய்திகள்

கடலூர்
மாநில செய்திகள்
விருத்தாசலம் அருகே தனியார் நிதி நிறுவன ஊழியரை தாக்கி கொலைமிரட்டல் ஒரே குடும்பத்தை சோ்ந்த 3 பேர் மீது வழக்கு

6 Sept 2023 12:15 AM IST
விருத்தாசலம் அருகே தனியார் நிதி நிறுவன ஊழியரை தாக்கி, கொலைமிரட்டல் விடுத்த ஒரே குடும்பத்தை சோ்ந்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருத்தாசலம்,
பண்ருட்டி அடுத்த காட்டுக்கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் காசி மகன் ராஜகுமரன் (வயது 30). இவர் விருத்தாசலத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று ராஜகுமரன், மோட்டார் சைக்கிள் வாங்கியதற்கான மாத தவணை தொகையை வசூல் செய்வதற்காக கார்குடல் கிராமத்தை சேர்ந்த அறிவழகன் என்பவருடைய வீட்டுக்கு சென்றார். அப்போது, அங்கிருந்த அறிவழகன் (58), அவரது மனைவி சுந்தரமதி (55), மகன் கோதண்டராமன் (36) ஆகிய 3 பேரும் சேர்ந்து தவணை தொகையை வசூலிக்க வந்த ராஜகுமரனை அசிங்கமாக திட்டி தாக்கி, கொலைமிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், அறிவழகன் உள்ளிட்ட 3 பேர் மீது விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.