< Back
மாநில செய்திகள்
நிதி சார் கல்வி விழிப்புணர்வு முகாம்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

நிதி சார் கல்வி விழிப்புணர்வு முகாம்

தினத்தந்தி
|
29 Oct 2022 10:37 PM IST

ஒண்ணுபுரம் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் நிதி சார் கல்வி விழிப்புணர்வு முகாம் நடந்தது.

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அருகே ஒண்ணுபுரம் கிளை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் இன்று நிதி சார் கல்வி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. காசாளர் அகிலா முன்னிலை வகித்தார்.

ஒண்ணுபுரம் கிளை மேலாளர் பாரதி தலைமை தாங்கி, கூட்டுறவு வங்கி சார்பில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் கடனுதவிகள் சிறு வணிகக் கடன், மகளிர் குழு கடன் உள்பட பல்வேறு கடனுதவிகள் குறித்து விளக்கிக் கூறினார்.

தொடர்ந்து சிறு வணிகக்கடன் ரூ.50 ஆயிரம் ஒரு நபருக்கு வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது.

முடிவில் உதவியாளர் நாராயணன் நன்றி கூறினார்.

Related Tags :
மேலும் செய்திகள்