< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
கொரோனா தொற்றால் உயிரிழந்தரேஷன்கடை ஊழியர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதிஉதவி
|26 May 2023 12:15 AM IST
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கொடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் நடத்தும் ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தவர் கோபால். கடந்த 21.5.2021 அன்று கொரோனோ நோய் தொற்றால் இவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.25 லட்சம் நிதி ஒப்பளிப்பு செய்து வழங்கப்பட்டது. இதற்கான காசோலையினை அவரது மனைவி கங்கா தேவியிடம் மாவட்ட கலெக்டர் உமா வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் நாமக்கல் மண்டல இணைப்பதிவாளர் செல்வக்குமரன், மாவட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ், பொது வினியோகத்திட்ட துணைப்பதிவாளர் ரவிச்சந்திரன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் செல்வ விஜயராணி ஆகியோர் உடன் இருந்தனர்.