சிவகங்கை
டாஸ்மாக் ஊழியர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதிஉதவி-அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கினார்
|தமிழக அரசு வழங்கிய ரூ.10 லட்சத்திற்கான காசோலையை டாஸ்மாக் ஊழியர் குடும்பத்தினரிடம் அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
இளையான்குடி
இளையான்குடி அருகே உள்ள இண்டங்குளம் கிராமத்தை சேர்ந்த அர்ஜுனன் காரைக்குடி டாஸ்மாக் மதுபான கடையில் பணிபுரிந்து வந்தார். கடையில் பெட்ரோல்குண்டு வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த அவர் இறந்தார். இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இறந்த அர்ஜுனன் குடும்பத்திற்கு நிதி உதவி அளிக்க உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று அமைச்சர் பெரியகருப்பன், அர்ஜூனன் வீட்டுக்கு சென்று அவரது மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகளுக்கு ஆறுதல் கூறினார். மேலும், அர்ஜுனன் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். பின்னர் தமிழக அரசு வழங்கிய ரூ.10 லட்சத்திற்கான காசோலையை அர்ஜூனன் குடும்பத்தினரிடம் அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
இந்நிகழ்வின் ேபாது தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ., சிவகங்கை கலெக்டர் மதுசூதன்ரெட்டி, முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன், பேரூராட்சி தலைவர் நஜுமுதீன், ஒன்றிய செயலாளர்கள் தமிழ்மாறன்,, வெங்கட்ராமன், கூட்டுறவு சங்க தலைவர் தமிழரசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன், தகவல் தொழில்நுட்ப அணி அன்பரசன், கண்ணன் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.