< Back
மாநில செய்திகள்
நிதிஉதவி
தென்காசி
மாநில செய்திகள்

நிதிஉதவி

தினத்தந்தி
|
23 Sept 2022 12:15 AM IST

பனையில் இருந்து தவறி விழுந்து இறந்த தொழிலாளி குடும்பத்துக்கு தட்சணமாற நாடார் சங்கம் நிதிஉதவி அளித்தது

தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை கிராமம் அய்யாபுரம் அருகே அழகப்பபுரம் ஊரைச் சேர்ந்தவர் ஜோசப் நாடார். பனை ஏறும் தொழிலாளி. இவர் பனையில் ஏறிவிட்டு இறங்கும்போது தவறி கீழே விழுந்து இறந்தார். இதையடுத்து அவரது மனைவி ஜெ.முத்து என்பவர், தனது கணவர் இறந்து விட்டதால் குடும்பம் மிகவும் கஷ்டப்படுவதாகவும், வறுமையில் வாடுவதாகவும் சங்கத்தில் இருந்து உதவி செய்ய கேட்டு மனு கொடுத்திருந்தார்.

அந்த மனுவை சங்க நிர்வாக சபை கூட்டத்தில் வைத்து பரிசீலனை செய்து உதவி தொகை வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஜோசப் நாடார் மனைவி ஜெ.முத்துவிடம் சங்கம் நலிந்தோர் நலநிதியில் இருந்து ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் நாடார், செயலாளர் டி.ராஜ்குமார் நாடார், பொருளாளர் ஏ.செல்வராஜ் நாடார் மற்றும் காரியக்கமிட்டி, நிர்வாக சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்