< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடியில் நகை திருட்டு வழக்கில் நிதி நிறுவன மேலாளர் கைது - 80 சவரன் நகைகள் பறிமுதல்
மாநில செய்திகள்

தூத்துக்குடியில் நகை திருட்டு வழக்கில் நிதி நிறுவன மேலாளர் கைது - 80 சவரன் நகைகள் பறிமுதல்

தினத்தந்தி
|
7 Oct 2022 7:20 PM GMT

போலீசார் நடத்திய விசாரணையில் நிதி நிறுவனத்தின் மேலாளர் நகைகளை திருடி மோசடி செய்தது தெரிய வந்தது.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக் நகரில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனத்தில் 130 சவரன் தங்க நகைகள் காணாமல் போனது தணிக்கையில் தெரியவந்தது. சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் திருடு போனது குறித்து நிதி நிறுவனத்தின் இயக்குனர் ராகவேந்திரா, முத்தையாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் நிதி நிறுவனத்தின் மேலாளர் அருள் ஞானகணேஷ் தங்க நகைகளை திருடி மோசடி செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 80 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர். மீதம் உள்ள நகைகள் குறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்