போலீஸ் நிலையத்தில் பாசபோராட்டம்...! காதல் திருமணம் செய்த மகள்...! மண்ணை அள்ளி வீசி சாபமிட்ட தாய்...!
|ஸ்ரீபவானி மற்றும் கார்த்திக் ஆகியோர் திருச்சி மாவட்டம் துறையூர் வடக்கு தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர்
திருச்சி:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டத்திலுள்ள பென்னாகரம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன், இவரது மகள் ஸ்ரீ பவானி அதே ஊரைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் இருவரும் மாயமான நிலையில், பெண்ணின் பெற்றோர் மகளை காணவில்லை என்று சொந்த ஊரான பெண்ணாடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் பெண்ணை மீட்டு தரக்கோரி நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்துள்ளார்கள்.
இந்நிலையில் ஸ்ரீபவானி மற்றும் கார்த்திக் ஆகியோர் திருச்சி மாவட்டம் துறையூர் வடக்கு தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தது பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து பெண்ணின் பெற்றோர் இருவரையும் பிடித்து துறையூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். கார்த்திக் திருமண வயதை எட்டாத நிலையில் அது குறித்தும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஸ்ரீபவானியின் பெற்றோர் தங்கள் மகளை தங்களுடன் அனுப்பி வைக்கும்படி கதறி அழுதுள்ளனர். அப்போது கார்த்திக் பெண்ணின் தாய் சுமதியின் கையை பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது. அதனால் பெண்ணின் தாயாரின் கையில் இருந்து ரத்தம் வழிந்தது. போலீஸ் நிலைய வாசலிலேயே மயக்கம் அடைந்து சுமதி கீழே விழுந்தார். இதையடுத்து அவரது கணவர் சுந்தர்ராஜன் துறையூர் போலீஸ் நிலையத்தில் கார்த்திக் மீது புகார் கொடுத்தார்.
பின்னர் சுமதி 108 ஆம்புலன்ஸ் மூலம் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
காதல் திருமணம் செய்த மகள் மீது மண்ணை அள்ளி வீசி தாய் சாபமிட்டு உள்ளார்.இது குறித்த வீடியோ சமூக ஊடங்களில் வைஅரலாகி உள்ளது.