< Back
மாநில செய்திகள்
கழிவுநீர் கால்வாய்- சாலை வசதி அமைப்பதற்கு கள ஆய்வு
கரூர்
மாநில செய்திகள்

கழிவுநீர் கால்வாய்- சாலை வசதி அமைப்பதற்கு கள ஆய்வு

தினத்தந்தி
|
10 Jun 2023 12:47 AM IST

கழிவுநீர் கால்வாய்- சாலை வசதி அமைப்பதற்கு கள ஆய்வு நடந்தது.

புகழூர் நகராட்சி 12-வது வார்டு சுந்தரம்பாள் நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் மற்றும் சாலை வசதி அமைத்து தரக்கோரி அப்பகுதி பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. இளங்கோ, புகழூர் நகர்மன்ற தலைவர் சேகர் என்கிற குணசேகரன், துணைத்தலைவர் பிரதாபன், நகராட்சி ஆணையர் கனிராஜ், மாவட்ட கவுன்சிலர் நெடுங்கூர் கார்த்தி மற்றும் அதிகாரிகள் குழுவினர் சுந்தரம்பாள் நகரில் கழிவுநீர் கால்வாய் மற்றும் சாலை வசதி அமைத்து கொடுக்க நேரில் கள ஆய்வு செய்து, அப்பகுதி பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டறிந்தனர்.

மேலும் செய்திகள்