< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
வயல் நண்டு விற்பனை மும்முரம்
|15 Oct 2023 12:37 AM IST
வடகாட்டில் வயல் நண்டு விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது மிதமான மற்றும் கன மழை பெய்து வருகிறது. மேலும் இந்த சீசனில் நிலவக்கூடிய காய்ச்சல் மற்றும் சளி காரணமாக ஏராளமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தநிலையில, வயல் நண்டு ரசம் குடித்தால் உடல் நலப்பிரச்சினை தீரும் என்பதால் வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வயல் நண்டு விற்பனையில் ஒரு சிலர் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு விற்பனையாகும் வயல் நண்டுகள் கிலோ ரூ.50 முதல் ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.