< Back
மாநில செய்திகள்
தஞ்சை பெரியகோவிலில் நவராத்திரி கலைவிழா
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

தஞ்சை பெரியகோவிலில் நவராத்திரி கலைவிழா

தினத்தந்தி
|
11 Oct 2023 1:43 AM IST

தஞ்சை பெரியகோவிலில் நவராத்திரி கலைவிழா 15-ந் தேதி தொடங்குகிறது

தஞ்சாவூர்;

தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது தமிழர்களின் கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு மட்டுமல்லாமல் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இங்கு தமிழகம் மட்டும் அல்லாது வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.இந்த கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி கலைவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி கலைவிழா வருகிற 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. அன்றைய தினம் பெரியநாயகி அம்மனுக்கு மனோன்மணி அலங்காரம் செய்யப்படுகிறது. 2-ம் நாளான 16-ந் தேதி மீனாட்சி அலங்காரமும், 3-ம் நாளான 17-ந் தேதி சதஸ் அலங்காரமும், 18-ந் தேதி காயத்ரி அலங்காரமும், 19-ந் தேதி அன்னபூரணி அலங்காரமும், 20-ந் தேதி கஜலட்சுமி அலங்காரமும், 21-ந் தேதி சரஸ்வதி அலங்காரமும், 22-ந் தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரமும், 23-ந் தேதி மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும், 24-ந் தேதி விஜயதசமி அலங்காரமும் செய்யப்படுகிறது.நவராத்திரி விழாவின்போது தினமும் பெரியநாயகி அம்மனுக்கு காலை 7.30 மணிக்கு அபிஷேக ஆராதனையும், மாலை 6.30 மணிக்கு சிறப்பு அலங்காரமும் நடைபெறுகிறது. தினமும் மாலை 6 மணிக்கு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

மேலும் செய்திகள்