< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
ஐயாறப்பர் கோவிலில் தெப்ப திருவிழா
|28 Aug 2023 12:21 AM IST
ஐயாறப்பர் கோவிலில் தெப்ப திருவிழா நடந்தது.
திருவையாறில் தருமபுர ஆதீனத்துக்கு சொந்தமான அறம்வளர்த்தநாயகி உடனாகிய ஐயாறப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள சூரிய புஷ்கரணி குளத்தில் தெப்ப திருவிழா நடந்தது. இதில் ஐயாறப்பர், அறம்வளர்த்த நாயகியுடன் தெப்பத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். தெப்பம் குளத்தை வலம் வந்தபிறகு குளத்தின் நடுமண்டபத்தில் ஐயாறப்பர், அறம்வளர்த்த நாயகியுடன் ஊஞ்சலில் எழுந்தருளினார். அப்போது தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவையாறு போலீசார் செய்திருந்தனர்.