கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில்தூய பாத்திமா அன்னை ஆலய தேர்த்திருவிழா
|கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னை ஆலய 50-ம் ஆண்டு தேர்த்திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் ஆலய பங்கு தந்தைகள் தலைமையில் திருப்பலி பூஜைகளும், மறையுரைகளும் நடந்தது. தொடர்ந்து தேவாலயத்தை சுற்றி சிறிய தேர்பவனி நடந்தது. தேர்த்திருவிழாவின் கடைசி நாளான நேற்று முன்தினம் காலை தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில், ஆடம்பர கூட்டுத்திருபலி நடந்தது.
பின்னர் மாலை வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட அன்னையின் பெரிய தேரை பாதிரியார் இருதயம் மந்திரித்து, தேர் பவனியை தொடங்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தது. இந்த தேர் பழையபேட்டையில் நிறைவடைந்தது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டைய மாநிலங்களிலும் இருந்தும் ஏராளமான கிறிஸ்தவர்கள் கல்நது கொண்டனர்.