< Back
மாநில செய்திகள்
புனித சிந்தாத்திரை அன்னை ஆலய தேர்பவனி
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

புனித சிந்தாத்திரை அன்னை ஆலய தேர்பவனி

தினத்தந்தி
|
8 May 2023 12:15 AM IST

தொண்டியில் புனித சிந்தாத்திரை அன்னை ஆலய திருவிழா தேர்பவனி நடைபெற்றது.

தொண்டி,

தொண்டியில் புனித சிந்தாத்திரை அன்னை ஆலய திருவிழா தேர்பவனி நடைபெற்றது. கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்ற இவ் ஆலய திருவிழாவில் தினமும் நவநாள் திருப்பலி மறையுறை நிகழ்த்தப்பட்டது. முக்கிய நிகழ்ச்சியாக திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி கருமாத்தூர் கிறிஸ்து இல்ல குரு மாணவர் பயிற்சி நிலைய அருட்தந்தை ஜோசப் லூர்து ராஜா தலைமையில் நடைபெற்றது. தொண்டி பங்கு தந்தை சவரி முத்து, அருட் தந்தையர்கள் மரிய அந்தோணி, அருள்ஜீவா, சுனி, ஜஸ்டின் திரவியம், லாரன்ஸ் ஆகியோர் கலந்துகொண்டு திருப்பலியை நிறைவேற்றினர். தொடர்ந்து வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித சிந்தாத்திரை அன்னை முக்கிய வீதிகள் வழியாக பவனியாக சென்று பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கினார். ஏராளமானோர் கலந்து கொண்டு அன்னையின் பாடல்களை பாடி, சிறப்பு ஜெபம் செய்து ஊர்வலமாக சென்றனர். இதனையொட்டி வாணவேடிக்கை, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நேற்று காலை தூத்துக்குடி முன்னாள் ஆயர் ஈவான் அம்புரோஸ் தலைமையில் திருவிழா திருப்பலி சிறப்பு மறையுறை மற்றும் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு, புது நன்மை, உறுதி பூசுதல் நிகழ்ச்சியும் கொடி இறக்கமும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை சவரி முத்து, அமலவை அருட் சகோதரிகள், பங்கு நிர்வாக குழுவினர், பங்கு இறை மக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்