< Back
மாநில செய்திகள்
தர்மபுரி பகுதியில்ஓணம் பண்டிகை கொண்டாட்டம்பெண்கள் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ச்சி
தர்மபுரி
மாநில செய்திகள்

தர்மபுரி பகுதியில்ஓணம் பண்டிகை கொண்டாட்டம்பெண்கள் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ச்சி

தினத்தந்தி
|
30 Aug 2023 1:00 AM IST

தர்மபுரி:

கேரள மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. தர்மபுரி பகுதியில் உள்ள கேரள மக்கள் வீடுகளில் ஓணம் பண்டிகையை கொண்டாடினர். அப்போது கேரள மக்கள் புத்தாடை அணிந்து அவரவர் வீடுகளில் சாமிக்கு பழங்கள், உணவு வகைகள் படையலிட்டு வழிபட்டனர். அந்தந்த வீடுகளில் பெண்கள் விதவிதமான பூக்களை கொண்டு அத்தப்பூ கோலமிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து கேரள விருந்து அளித்து ஓணம் பண்டிகை வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

மேலும் செய்திகள்