சிவகங்கை
சூரத்தில் இருந்து 550 டன் யூரியா உரங்கள் வந்தன
|சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு வழங்குவதற்காக 550 டன் யூரியா உரம் சூரத்திலிருந்து சிவகங்கை மாவட்டத்திற்கு வந்துள்ளது.
சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு வழங்குவதற்காக 550 டன் யூரியா உரம் சூரத்திலிருந்து சிவகங்கை மாவட்டத்திற்கு வந்துள்ளது.
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
உரங்கள்
சிவகங்கை மாவட்ட விவசாயிகள் தற்போது பெய்துவரும் மழையை பயன்படுத்தி 30 ஆயிரம் எக்டேருக்கு மேல் சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். விவசாயிகளுக்கு தேவைப்படும் யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் வினியோகம் செய்திட மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விவசாயிகளுக்கு தடையின்றி உரம் வினியோகம் செய்வது தொடர்பாக ஏற்கனவே அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர்களுக்கும் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது,
இதில் விவசாயிகளுக்கு தாமதமின்றி பயிர்கடன்கள் மற்றும் உரங்கள் வழங்கிட அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட விவசாயிகளுக்கு வழங்குவதற்காக, சூரத்திலுள்ள கிரிப்கோ நிறுவன யூரியா 550 டன்கள் ெரயில் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இருப்பு
இவை கூடல் நகர் ெரயில் நிலையத்திலிருந்து கொண்டு வரப்பட்டு மாவட்டத்தில் உள்ள 48 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்களை வாங்கி பயன்பெறலாம். தற்போது மாவட்டத்தில் யூரியா 2,937 டன்கள், டி.ஏ.பி. 1,473 டன்கள், பொட்டாஷ் 406 டன்கள் மற்றும் காம்ப்ளக்ஸ் 2549 டன்கள் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
வரும் சம்பா பருவத்திற்கு தேவைப்படும் உரங்கள் கணக்கீடு செய்யப்பட்டு முன்கூட்டியே இருப்பு வைத்து விவசாயிகளுக்கு வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தற்போது வந்துள்ள யூரியா உரங்கள் மாவட்டத்தில் உள்ள 48 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு பிரித்து அனுப்பட்டுள்ளது.
மேலும் விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்கள் வாங்கும்போது தங்களுடைய ஆதார் அட்டைகளை கொடுத்து விற்பனை நிலையத்தின் மூலமாக உரிய பில்களை பெற்று உரங்களை பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.