< Back
மாநில செய்திகள்
வயல்வெளியில் ட்ரோன் மூலம் உரம், மருந்து தெளிப்பு - ராமநாதபுரத்தில் முதல் முறையாக அறிமுகம்
மாநில செய்திகள்

வயல்வெளியில் ட்ரோன் மூலம் உரம், மருந்து தெளிப்பு - ராமநாதபுரத்தில் முதல் முறையாக அறிமுகம்

தினத்தந்தி
|
10 Aug 2022 9:42 PM IST

வயல்வெளிகளில் ட்ரோன் மூலம் உரம், மருந்து தெளிக்கும் தொழில்நுட்பத்திற்கான செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

ராமநாதபுரம்,

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில், ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல் முறையாக வயல்வெளிகளில் ட்ரோன் மூலம் உரம், மருந்து தெளிக்கும் தொழில்நுட்பத்திற்கான செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

இந்த பயிற்சியில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த புதிய தொழில்நுட்பம் விவசாயிகளுக்கு மிகவும் உபயோகமானதாக இருப்பதோடு, செலவினங்களை குறைக்கவும் வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்