< Back
மாநில செய்திகள்
தர்மபுரிக்கு சரக்கு ரெயிலில் 1,305 டன் உரம் வந்தது
தர்மபுரி
மாநில செய்திகள்

தர்மபுரிக்கு சரக்கு ரெயிலில் 1,305 டன் உரம் வந்தது

தினத்தந்தி
|
21 Aug 2023 12:30 AM IST

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து தர்மபுரி ரெயில் நிலையத்திற்கு சரக்கு ரெயில் மூலம் 422 டன் யூரியா, 437 டன் டி.ஏ.பி. மற்றும் 446 டன் காம்ப்ளக்ஸ் என மொத்தம் 1,305 டன் உர மூட்டைகள் வந்தது. இந்த உரத்தை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள உரக் கடைகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பணியை வேளாண்மை உதவி இயக்குனர் தேன்மொழி ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது தர்மபுரி ஸ்பிக் விற்பனை அலுவலர் அர்சுணன், ஈஸ்வரன் மற்றும் மொத்த விற்பனையாளர் பார்த்திபன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதுகுறி்த்து வேளாண் இணை இயக்குனர் விஜயா கூறியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் நடப்பு மாதத்திற்கு 2955 டன் யூரியா, 2282 டன் டி.ஏ.பி மற்றும் 1373 டன் பொட்டாஷ், 7612 டன் காம்ப்ளக்ஸ், 397 டன் சூப்பர் பாஸ்பேட் உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் உர விற்பனை நிலையங்களுக்கு ஆதார் எண்ணுடன் சென்று மண்வள அட்டை பரிந்துரையின்படி பயிருக்கு தேவையான உரங்களை மட்டும் விற்பனை முனைய கருவி மூலம் ரசீதுபெற்று பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்