< Back
மாநில செய்திகள்
விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் உரம்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் உரம்

தினத்தந்தி
|
29 Oct 2022 10:06 PM IST

விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் உரம் வழங்கப்பட்டது.

தொண்டி,

திருவாடானை தாலுகா அஞ்சுகோட்டை எட்டுகுடி, சிறுகம்பையூர் மற்றும் திருத்தேர்வளை உள்பட மாவட்டம் முழுவதும் சுமார் 25 கூட்டுறவு சங்கங்களில் ஆயிரத்து 675 விவசாயிகளுக்கு கடந்த 2020 -21-ம் ஆண்டிற்கு பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்படாமல் நிலுவையில் இருந்து வந்தது. இதுதொடர்பாக திருவாடானை ஆர்.எஸ். மங்கலம் வட்டார விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் 2020-21-ம் ஆண்டு பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படாத விவசாயி களுக்கு கடனை தள்ளுபடி செய்வதுடன் புதிய பயிர் கடன் வழங்க வேண்டும் என கடந்த ஓராண்டுக்கு மேலாக விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட கூட்டுறவுத்துறை அதிகாரிகள் அளித்த உத்தரவின் அடிப்படையில் முதல் கட்டமாக திருவாடானை அருகே உள்ள அஞ்சுகோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 2020-21-ம் ஆண்டுக்கு பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படாத விவசாயிகளுக்கு உரம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்