கரூர்
பெண் கிராம நிர்வாக உதவியாளர் வீட்டில் நகை-பணம் திருட்டு
|பெண் கிராம நிர்வாக உதவியாளர் வீட்டில் நகை-பணம் திருட்டு நடந்துள்ளது.
க.பரமத்தி,
பெண் கிராம நிர்வாக உதவியாளர்
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே உள்ள குளத்தூர்பட்டியை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மனைவி கீதா (வயது 37). இவர் தும்பிவாடி கிராம நிர்வாக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார்.
இதனால் தனது மாமனார் பழனியப்பன் (80) என்பவருடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் சம்பவத்தன்று பழனியப்பன் 100 நாள் வேலைக்கு சென்று விட்டார். கீதா அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அலுவலக வேலையாக சென்று விட்டார். இதனால் வீடு பூட்டிக்கிடந்தது.
நகை-பணம் திருட்டு
இந்தநிலையில் மாலையில் வேலை முடிந்து பழனியப்பன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 1 பவுன் கொண்ட 3 தங்க காயின்கள், ½ பவுன் கம்மல், ¼ பவுன் மோதிரம் மற்றும் ரூ.10 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இந்த திருட்டு குறித்து பழனியப்பன் கொடுத்த புகாரின்பேரில் க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிந்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.