< Back
மாநில செய்திகள்
மொபட் மீது லாரி மோதியதில் பெண் பலி
நாமக்கல்
மாநில செய்திகள்

மொபட் மீது லாரி மோதியதில் பெண் பலி

தினத்தந்தி
|
11 Sept 2023 12:15 AM IST

சேந்தமங்கலம் அருகே உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றபோது மொபட் மீது லாரி மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக இறந்தார்.

சேந்தமங்கலம்

பெண் பலி

சேந்தமங்கலம் அருகே உள்ள ராமநாதபுரம் புதூரை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 51). லாரி டிரைவர். இவரது மனைவி தீபா (47). இவர்களுக்கு பிரகாஷ் என்ற மகனும் சபிதா, தாரணி ஆகிய 2 மகள்களும் உள்ளனர். இந்தநிலையில் தீபா நேற்றுமுன்தினம் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு தனது மொபட்டில் நாமக்கல்லுக்கு சென்று கொண்டிருந்தார்.

சேந்தமங்கலம் அருகே உள்ள அக்கியம்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் சென்றார். அப்போது அவருக்கு பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்தார். அதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் தீபாவை காப்பாற்றி சிகிச்சைக்காக நாமக்கல் அரச மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை

பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காாக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டும் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உறவினர்வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றபோது மொபட் மீது லாரி மோதியதில் பெண் பரிதாபமாக இறந்த சம்பவம் சேந்தமங்கலம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்