< Back
மாநில செய்திகள்
குடும்பத்தகராறில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

குடும்பத்தகராறில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை

தினத்தந்தி
|
23 Sept 2022 5:07 PM IST

குடும்பத்தகராறு காரணமாக பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குடும்பத்தகராறு

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் ஒழுகரை கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 34). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுலோச்சனா (29). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் குடும்பத்தகராறு காரணமாக மனம் உடைந்த நிலையில் காணப்பட்ட சுலோச்சனா வீட்டில் சேலையில் தூக்குப்போட்டு கொண்டார்.

சாவு

அங்கு இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவரை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சுலோச்சனா பரிதாபமாக இறந்தார். இது குறித்து உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உத்தரவின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்