< Back
மாநில செய்திகள்
பெண் தூக்குப்போட்டு தற்கொலை
திருநெல்வேலி
மாநில செய்திகள்

பெண் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
29 Jun 2023 3:13 AM IST

நெல்லை அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லையை அடுத்த பாலாமடை அருகே உள்ள கட்டளை பகுதியை சேர்ந்தவர் வெள்ளைத்துரை. இவருடைய மனைவி விஜயா (வயது 47). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். விஜயா நேற்று தென்குளத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். மாலையில் வெள்ளைத்துரை கடைக்கு சென்றிருந்தார். அப்போது விஜயா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த சீவலப்பேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்