< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
பெண் தூக்குப்போட்டு தற்கொலை
|9 May 2023 12:40 AM IST
பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வி.கைகாட்டி:
அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகேசனின் மகள் நிஷா என்ற பிரேமா(வயது 19). இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததால், ஆஸ்பத்திரியில் காண்பித்து மருந்து, மாத்திரை சாப்பிட்டு வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் முருகேசன், தனது மனைவியுடன் அஸ்தினாபுரம் கிராமத்திற்கு வளையல் வியாபாரத்திற்கு சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த பிரேமாவுக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதால், அவர் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரமங்கலம் போலீசார், பிரேமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.