கன்னியாகுமரி
பெண் தூக்குப்போட்டு தற்கொலை
|பெண் தூக்குப்போட்டு தற்கொலை
குளச்சல்:
குளச்சல் அருகே உள்ள பெத்தேல்புரம் பால்பண்ணை கூட்டுவிளையை சேர்ந்தவர் ராஜேஷ், கொத்தனார். இவருக்கு பிரேம ஷீலா(வயது 33) என்ற மனைவியும், அபினேஷ் என்ற மகனும், அபினிஸ் என்ற மகளும் உள்ளனர். ராஜேஷ் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்து விட்டு மீண்டும் வெளிநாடு சென்றுவிட்டார்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரேம ஷீலாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், பிரேம ஷீலா மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பிரேம ஷீலா வீட்டின் படுக்கை அறையில் தூக்கில் தொங்கினார். படுக்கை அறைக்கு வந்த இதை கண்டு கதறி அழுதனர். அவர்கள் அழுகுரல் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் பிரேம ஷீலாவை மீட்டு குளச்சல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பிரேம ஷீலா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பிரேம ஷீலாவின் தாயார் செல்வி குளச்சல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.