கன்னியாகுமரி
குழித்துறை அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை
|குழித்துறை அருகே மகன் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
களியக்காவிளை:
குழித்துறை அருகே மகன் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெண் தற்கொலை
குழித்துறை குளவிளை பகுதியை சேர்ந்தவர் ராபின்சன். இவர் கேரளாவில் கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பிளவர் லில்லி (வயது 61). இவர்களுடைய மகன் ஜிதின் மது பழக்கத்துக்கு அடிமையாகி கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனால் பிளவர் லில்லி மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பிளவர் லில்லி வீட்டின் வெளியே உள்ள சமையல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீசார் விசாரணை
இதுபற்றி களியக்காவிளை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பிளவர் லில்லி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது மகன் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் பிளவர் லில்லி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.