சேலம்
பெண் தூக்குபோட்டு தற்கொலை
|கன்னங்குறிச்சி:-
சேலத்தில் அடுத்த மாதம் மகனுக்கு திருமணம் நடக்க இருந்த நிலையில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அடுத்த மாதம் திருமணம்
சேலம் கோரிமேடு ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 48). இவருடைய கணவர் விவேகானந்தன், அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து வந்தார். பணிக்காலத்திலேயே அவர் இறந்து விட்டார். இவர்களுக்கு லோகநாதன் (28) என்ற மகனும், மதி (27) என்ற மகளும் உள்ளனர்.
மதிக்கு ஏற்கனவே திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். இதற்கிடையே லோகநாதனுக்கு திருமணம் செய்ய பெண் பார்த்து நிச்சயம் செய்யப்பட்டது. அடுத்த மாதம் திருமணம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன.
தற்கொலை
இதற்கிடையே தனலட்சுமி வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த கன்னங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தனலட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தனலட்சுமி தற்கொலை தொடர்பாக கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தனலட்சுமியின் தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.