< Back
மாநில செய்திகள்
பெண் தூக்குப்போட்டு தற்கொலை
சேலம்
மாநில செய்திகள்

பெண் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
21 March 2023 1:00 AM IST

ஓமலூர்:-

ஓமலூர் அடுத்த சக்கரை செட்டிப்பட்டி புதுக்கடை பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி (வயது 50). இவர்களுடைய மகள் கோகிலா (23). இவருக்கும், பொன்னம்மாபேட்டையை சேர்ந்த கனகராஜ் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இவர்களுக்கு 2½ வயதில் இளமாறன் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கோகிலாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் கடந்த 12-ந் தேதி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் சிகிச்சை முடிந்து தனது தந்தை வீடான புதுக்கடைக்கு வந்து தங்கினார்.

இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது கோகிலா சேலையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைபார்த்த அவரது பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இது குறித்து ஓமலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜன், சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணம் ஆகி 4 ஆண்டுகளே ஆவதால் சம்பவம் தொடர்பாக மேட்டூர் உதவி கலெக்டர் தணிகாசலம் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்