அரியலூர்
தூக்குப்போட்டு பெண் தற்கொலை
|தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கீழப்பழுவூர்:
திருவாரூர் மாவட்டம், வேலூர் நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம்(வயது 65). இவரது மகள் கற்பகலெட்சுமியை(24), அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அழகியமனவாளன் கிராமத்தில் உள்ள அவரது தங்கை மகன் இளவரசன் என்பவருக்கு கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தனர். கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு கற்பக லெட்சுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கற்பகலெட்சுமி வீட்டில் உள்ள அறையில் அவரது சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த தூத்தூர் போலீசார், அங்கு வந்து கற்பகலெட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கற்பகலெட்சுமி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.