கன்னியாகுமரி
தூக்குப்போட்டு பெண் தற்கொலை
|திருவட்டார் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொைல செய்து கொண்டார்.
திருவட்டார்:
திருவட்டார் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொைல செய்து கொண்டார்.
கணவரை பிரிந்தார்
திருவட்டார் அருகே உள்ள மேக்காமண்டபம் விராலிக்காட்டுவிளையைச் சேர்ந்தவர் ஆன்றணி பால் கென்னடி. இவருடைய மகள் ஆஷா (வயது 27). இவருக்கும் குருந்தன்கோட்டை சேர்ந்த ஷாஜி என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
இந்தநிலையில் திருமணம் ஆன 2 ஆண்டுகளில் கணவன்-மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். பின்னர் ஆஷா திண்டுக்கல்லை சேர்ந்த உதயபிரகாஷ் என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உதயபிரகாஷ் ஆஷாவை பிரிந்து வேறு பெண்ணுடன் சென்றுவிட்டார்.
தற்கொலை
இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளாக கைசாலவிளையில் ஒரு வாடகை வீட்டில் ஆஷா மகளுடன் வசித்தார். மேலும், வாழ்க்கையில் வெறுப்படைந்த ஆஷா 'இப்படி வாழ்வதை விட சாவதே மேல்' என தனது தாயார் பேபி சுலோச்சனாவிடம் அடிக்கடி கூறிவந்தாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்த ஆஷா நேற்று அதிகாலை வீட்டின் சமையலறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த திருவட்டார் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆஷாவின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆஷாவின் தாயார் பேபிசுலோச்சனா கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.