< Back
மாநில செய்திகள்
சேலம்
மாநில செய்திகள்
பெண் தூக்குப்போட்டு தற்கொலை
|23 Jan 2023 1:00 AM IST
கருப்பூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கருப்பூர்:-
கருப்பூர் அருகே உள்ள வெள்ளக்கல்பட்டி, சீனிவாசா நகர் பகுதியை சேர்த்தவர் கோவிந்தராஜ், எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி கீர்த்தனா (வயது 39). இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகளும், 10 வயதில் மகனும் உள்ளனர். கீர்த்தனாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. இதனால் மனம் உடைந்து காணப்பட்ட அவர் நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டில் தனது சேலையால் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து கணவர் கோவிந்தராஜ் கொடுத்த புகாரின் பேரில், கருப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விக்னேஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று கீர்த்தனாவின் உடலை கைப்பற்றி பிேரத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.