< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
தூக்குப்போட்டு பெண் தற்கொலை
|20 Dec 2022 12:15 AM IST
கருங்கல் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை
கருங்கல்,
கருங்கல் அருகே உள்ள பூட்டேற்றி காஞ்சிரங்காட்டு விளையை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி ஷெர்லி (வயது32). சம்பவத்தன்று முருகேசனின் நிலத்தில் இவரிடம் பேச்சுவார்த்தை இல்லாத ஒரு நபர் தனது வாகனத்தை நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முருகேசன் அந்த நபரை தட்டிக்கேட்டு தகராறு செய்துள்ளார். இதை ஷெர்லி தடுத்தார். இதனால் கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த ஷெர்லி மாடிக்கு சென்று மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.