< Back
மாநில செய்திகள்
பெண் தூக்குப்போட்டு தற்கொலை
வேலூர்
மாநில செய்திகள்

பெண் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
26 Nov 2022 11:01 PM IST

மேல்பாடி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வள்ளிமலை

வேலூர் மாவட்டம் மேல்பாடியை அடுத்த தேன்பள்ளி வெங்கடாபுரம் அருந்ததி காலனி பகுதியை சேர்ந்தவர் பாலாஜி. அவரது மனைவி சசிகலா (வயது 33). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.

சிப்காட் பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலையில் சசிகலா வேலை செய்து வந்தார். இந்த நிலையில் அவர் தோல் சம்பந்தமான நோயால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அவர் வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று சசிகலா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் மேல்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சசிகலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்