< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
தூக்குப்போட்டு பெண் தற்கொலை
|24 Sept 2022 12:15 AM IST
கடையநல்லூரில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்
கடையநல்லூர்:
கடையநல்லூர் மதினா நகரைச் சேர்ந்தவர் மசூது மனைவி பவுசியா பானு (வயது 29). இருதய அறுவை சிகிச்சை செய்து வீட்டில் விரக்தி அடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடையநல்லூர் போலீசார் பவுசியா பானுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.