< Back
மாநில செய்திகள்
பண்ருட்டி அருகே    பெண் தூக்குப்போட்டு தற்கொலை
கடலூர்
மாநில செய்திகள்

பண்ருட்டி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
9 Sept 2022 10:50 PM IST

பண்ருட்டி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பண்ருட்டி,

பண்ருட்டி அருகே உள்ள கீழக்குப்பம் கிராமத்தில் வசித்து வந்தவர் விஜயகுமார். இவருடைய மனைவி காந்திமதி (வயது 35). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். காந்திமதியுடன் குழந்தைகள் வசித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் காந்திமதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காந்திமதி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா? என விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்