கன்னியாகுமரி
.இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில்மணப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
|திங்கள்சந்தை அருகே இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து ெகாண்டார்
திங்கள்சந்தை:
திங்கள்சந்தை அருகே இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து ெகாண்டார்.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
எம்.ஏ. பட்டதாரி
திங்கள்சந்தை அருகே உள்ள பிலாக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுகுமார். இவரது மகள் காயத்ரிதேவி (வயது23), எம்.ஏ. பட்டதாரி. இவர் தற்போது பெங்களூருவில் ஒரு ஐ.ஏ.எஸ். அகாடமியில் படித்து வந்தார்.
காயத்ரிதேவிக்கும் இரணியல்கோணம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்க பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டது. இவர்களது திருமணம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுவதாக இருந்தது. இதையொட்டி இருதரப்பு மணவீட்டாரும் திருமண ஏற்பாடுகளை கவனித்து வந்தனர்.
திருமணத்தையொட்டி மணமகள் வீட்டுக்கு உறவினர்கள் வரத்தொடங்கினர். திருமண வீடு களைகட்டி இருந்தது.
தூக்கில் தொங்கினார்
இந்தநிலையில் நேற்று காலையில் காயத்ரிதேவி குளிக்க செல்வதாக கூறி மாடியில் உள்ள அறைக்கு சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை.
சந்தேகம் அடைந்த உறவினர்கள் அறையின் கதவை தட்டினர். ஆனால், உள்ளிருந்து எந்த சத்தமும் வரவில்லை. உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
காயத்ரிதேவி மின்விசிறியில் தூக்குப்போட்ட நிலையில் தொங்கி கொண்டிருந்தார். உடனே, அவரை மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், காயத்ரிதேவி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
உறவினர்கள் கதறல்
திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் மணமகள் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். மணகோலத்தில் பார்க்க வேண்டியவரை பிணக்கோலத்தில் பார்த்து கதறி அழுதனர்.
இதுகுறித்து இரணியல் ேபாலீசுக்கு தகவல் ெகாடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்த பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை ெசய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.