< Back
மாநில செய்திகள்
தூக்குப்போட்டு பெண் தற்கொலை
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

தூக்குப்போட்டு பெண் தற்கொலை

தினத்தந்தி
|
19 Aug 2022 9:36 PM IST

தூக்குப்போட்டு பெண் தற்கொலை

நாகர்கோவில்:

நாகர்கோவில் பெருவிளை விவேகானந்தர் தெருவைச் சேர்ந்தவர் ஜெயராஜன் (வயது 56). இவர் மார்த்தாண்டத்தில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கவுரி பிரசாத் (48). நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கவுரி பிரசாத் வீட்டின் படுக்கையறையில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆசாரிபள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் மேரி மெரிபா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கவுரி பிரசாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்