< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
பெண் தூக்குப்போட்டு தற்கொலை
|2 Aug 2022 11:33 PM IST
திண்டுக்கல்லில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
திண்டுக்கல் முத்தழகுபட்டியை சேர்ந்தவர் வினோத்குமார். தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மனைவி சுகன்யா (வயது 25). இவர் இன்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் குடும்ப தகராறில் அவர் தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுபற்றி போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.