< Back
மாநில செய்திகள்
தூக்குப்போட்டு பெண் தற்கொலை
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

தூக்குப்போட்டு பெண் தற்கொலை

தினத்தந்தி
|
15 July 2022 2:33 PM IST

திருக்கழுக்குன்றம் அருகே குடும்ப தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்திமங்களம் பகுதியில் வசித்து வருபவர் ராமமூர்த்தி (வயது 32). கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் திருப்போரூர் அடுத்த வெண்பேடு கிராமத்தை சேர்ந்த பிரபாவதி (23) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு 5 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் பிரபாவதிக்கும் மாமியார் சந்தானலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் காலை ராமமூர்த்தி வேலைக்கு சென்ற பிறகு பிரபாவதிக்கும் மாமியார் சந்தானலட்சுமிக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனம்முடைந்த பிரபாவதி வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்க்கு விரைந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்