< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
பெண் தூக்குப்போட்டு தற்கொலை
|31 Aug 2023 12:15 AM IST
சேந்தமங்கலம்
சேந்தமங்கலம் பேரூராட்சியில் உள்ள காமராஜபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 58). விவசாயி. இவரது 2-வது மனைவி கலைச்செல்வி (55). இவர்களுக்கு திருமணம் ஆகி சுமார் 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. குழந்தைகள் இல்லை. இந்தநிலையில் தமிழ் செல்விக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மாரிமுத்து அக்கம்பத்தினர் உதவியுடன் கலைச்செல்வியை காப்பாற்றி சிகிச்சைக்காக சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கலைச்செல்வி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.