< Back
மாநில செய்திகள்
பெண் தூக்குப்போட்டு தற்கொலை
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

பெண் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
23 Aug 2023 12:15 AM IST

கன்னியாகுமரி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி அருகே உள்ள ஒற்றையால்விளை பகுதியை சேர்ந்தவர் சகாய ஜெனீஸ். இவர் வெளிநாட்டில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி சாந்தூஸ் மேரி என்ற சாந்தி (வயது 44). இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகனும், 13 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்தநிலையில் நேற்று காலை வழக்கம் போல சாந்தூஸ் மேரியின் 2 பிள்ளைகளும் பள்ளிக்கு சென்றனர். வீட்டில் தனியாக இருந்த சாந்தூஸ் மேரி வீட்டின் படுக்கை அறையில் உள்ள ஜன்னலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கன்னியாகுமரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சாந்தூஸ் மேரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்